/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வறட்சியால் தவிக்கும் குடிமங்கலம் ஒன்றியம்! குளங்களுக்கு தண்ணீர் தேவை
/
வறட்சியால் தவிக்கும் குடிமங்கலம் ஒன்றியம்! குளங்களுக்கு தண்ணீர் தேவை
வறட்சியால் தவிக்கும் குடிமங்கலம் ஒன்றியம்! குளங்களுக்கு தண்ணீர் தேவை
வறட்சியால் தவிக்கும் குடிமங்கலம் ஒன்றியம்! குளங்களுக்கு தண்ணீர் தேவை
ADDED : ஏப் 07, 2024 09:03 PM
உடுமலை:குடிமங்கலம் பகுதியில், நிலவும் வறட்சியால், கிராம குளங்கள் தண்ணீரின்றி வறண்டு, குடிநீர் தட்டுப்பாடு அனைத்து கிராமங்களிலும் அதிகரித்துள்ளது; தட்டுப்பாட்டை தவிர்க்க, குளங்களுக்கு பி.ஏ.பி., திட்டத்தில் தண்ணீர் திறக்க வேண்டும்.
குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளுக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
திட்டத்தின் கடைக்கோடியில் அமைந்துள்ள கிராமங்களுக்கு, பற்றாக்குறையாகவே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், பருவமழை பொழிவு குறைவு போன்ற காரணங்களால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு, உள்ளூர் நீராதாரங்களான போர்வெல்கள் வற்றி வருகின்றன. இதனால், பல கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
போர்வெல்களுக்கு நீர் வரத்து அளித்து, நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கும், குளங்கள் வறட்சியால், காய்ந்து கிடக்கின்றன.
கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் குளங்களுக்கு தண்ணீர் விட வேண்டும் என அனைத்து தரப்பினரும், கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குளங்களில் நீர் நிரப்பினால், தென்மேற்கு பருவமழை துவங்கும் வரை, குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பதுடன், நிலத்தடி நீர் மட்டத்தையும் பாதுகாக்க முடியும்.
இது குறித்து, பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசன காலத்திலேயே, குடிமங்கலம் ஒன்றிய மக்கள் பிரதிநிதிகள் பொதுப்பணித்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.
அதிகாரிகளின் அலட்சியத்தால், பல்வேறு கிராமங்கள் வறட்சியில் சிக்கித்தவிக்கின்றன. எனவே பருவமழை துவங்கும் முன், குளங்களுக்கு தண்ணீர் நிரப்ப வேண்டும்; இல்லாவிட்டால் குடிமங்கலம் ஒன்றியம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில், ஈடுபடும் நிலை உருவாகும்.

