/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிட்ஸ் கிளப் பள்ளி மாணவருக்கு பாராட்டு
/
கிட்ஸ் கிளப் பள்ளி மாணவருக்கு பாராட்டு
ADDED : மே 16, 2024 05:20 AM

திருப்பூர் : திருப்பூர், நிப்ட்-டீ ஆடை வடிவமைப்பு கல்லுாரியில், தேசிய ஆடை வடிவமைப்பு மற்றும் நெட் பேஷன் டெக்னாலஜி நுழைவுத்தேர்வு நடந்தது.
இத்தேர்வில், காங்கயம் ரோடு, புண்ணியவதி சாலையிலுள்ள கிட்ஸ் கிளப் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் சஜிஷ்ணு பங்கேற்றார். தேசிய அளவில் இரண்டு லட்சம் பேர் எழுதிய தேர்வில், கிட்ஸ் கிளப் மாணவர், 28வது இடமும், ஓ.பி.சி., என்.சி.எல்., பிரிவில் நான்காமிடமும் பெற்று, சாதனை படைத்துள்ளார்.
பலராலும் விரும்பப்படும் ஆடை வடிவமைப்பு துறை நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவரை கிட்ஸ் கிளப் பள்ளி தலைவர் மோகன் கார்த்திக், பள்ளி இயக்குனர் ரமேஷ், நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா நிக்கில், பள்ளியின் மூத்த தலைவர் நிவேதிகா, பள்ளியின் முதல்வர் தீபாவதி உள்ளிட்டோர் பாராட்டினர்.