/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருவாங்கூர் சமஸ்தான மகாராணிக்கு பாராட்டு
/
திருவாங்கூர் சமஸ்தான மகாராணிக்கு பாராட்டு
ADDED : ஜூலை 08, 2024 10:34 PM

திருப்பூர்:அவிநாசி அருகே புதுப்பாளையத்தில் உள்ள ரேவதி நர்சிங் கல்லுாரியில், திருவாங்கூர் சமஸ்தான மகாராணி கவுரி லட்சுமி பாயிக்கு பாராட்டு விழா மற்றும் புத்தகம் வாசிப்பு விழிப்புணர்வு ஆகிய நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி நிர்வாக அறங்காவலர் ரேவதி முன்னிலை வகித்தார். கல்லுாரி நிர்வாக இயக்குனர் டாக்டர் ஹரி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் சுபிகிருஷ்ணன் மற்றும் கல்லுாரி நிர்வாக அலுவலர் டாக்டர் எமரால்டு, பொன்னையன் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, திருவாங்கூர் சமஸ்தான மகாராணி கவுரி ராணி கவுரி லட்சுமி பாயிக்கு, அவரின் சமுதாய சேவையை பாராட்டும் வகையில் கல்லுாரி நிர்வாகம் மற்றும் மாணவ, மாணவியர் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
--------------------
ரேவதி நர்சிங் கல்லுாரியில் நடந்த விழிப்புணர்வு முகாமை, திருவிதாங்கூர் சமஸ்தான மகாராணி, தீபம் ஏற்றி துவக்கி வைத்தார்.