/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குலாலர் பிள்ளையார் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
/
குலாலர் பிள்ளையார் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
ADDED : செப் 09, 2024 12:27 AM

திருப்பூர்;திருப்பூர், குலாலர் பிள்ளையார் கோவில் கும்பாபிேஷகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் குலாலர் பிள்ளையார் கோவில் உள்ளது. கோவில் திருப்பணிகள் நிறைவுற்று நேற்று கும்பாபிேஷகம் விமரிசையாக நடந்தது.
கடந்த, 6ம் தேதி விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ேஹாமத்துடன் கும்பாபிேஷக விழா துவங்கியது. நவக்கிரஹ ேஹாமம், தீர்த்தக்குட ஊர்வலம், வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தன.
தொடர்ந்து, யாகசாலை பூஜைகள், சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க சிறப்புடன் நடந்தன. நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு, நான்காம் யாக வேள்வி பூஜை துவங்கியது; நிறைவேள்வியை தொடர்ந்து, காலை, 8:15 மணிக்கு, குலாலர் பிள்ளையார் விமான கலசத்துக்கு கும்பாபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, 8:30 மணிக்கு, மூலவர் மகா கும்பாபிேஷகம் கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகளை தொடர்ந்து, குஜராத்தி மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள் தலைமையில், விஸ்வேஸ்வர சுவாமி கோவில் சிவாச்சாரியார்களால், நாதஸ்வர கலைஞர் சிங்காரவேலு குழுவினரின் மங்கள இசை முழங்க, கும்பாபிேஷகம் சிறப்புற நடந்தது.
விழா ஏற்பாடுகளை, அறங்காவலர்கள் மற்றும் குலாலர் நற்பணி டிரஸ்ட் நிர்வாகிகள், செய்திருந்தனர்.
----
2 படங்கள்
திருப்பூர், ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள, குலாலர் பிள்ளையார் கோவிலில் நேற்று கும்பாபிேஷகம் நடந்தது; கோபுரக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்படுகிறது.
கும்பாபிேஷகத்தில் பங்கேற்ற பக்தர்கள்.