/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய போட்டிகளில் குமுதா பள்ளி சாதனை
/
குறுமைய போட்டிகளில் குமுதா பள்ளி சாதனை
ADDED : செப் 02, 2024 11:37 PM
திருப்பூர்;-நம்பியூர் குறுமைய அளவில், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், புளியம்ப்பட்டி எஸ்.ஆர்.சி., பள்ளியில் நடைபெற்றது.இதில், குமுதா பள்ளி மாணவர்கள், கையுந்து போட்டியில், ஆறு பிரிவுகளில் முதலிடம் பெற்றனர்.மேலும் இறகுப்பந்து, செஸ், கேரம், டேபிள் டென்னிஸ் ஆகியவற்றில், 82 தங்கம் மற்றும் 6 வெள்ளிப் பதக்கங்கள் பெற்றனர்.
மேலும் தடகளப் போட்டிகளில், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம், தடை ஓட்டம் ஆகியவற்றில் 28 தங்கம்; 29 வெள்ளி மற்றும் 15 வெண்கலப் பதக்கங்களை பெற்றனர்.
குழு விளையாட்டு மற்றும் தனிநபர் போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் 110 தங்கம்; 35 வெள்ளி 15 வெண்கலப் பதக்கங்கள் பெற்றுள்ளனர். குறுமைய அளவில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலாளர் அரவிந்தன், இணை செயலர் மாலினி, விளையாட்டு இயக்குநர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.