/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குன்னத்துார் கொங்கு மெட்ரிக் 10ம் வகுப்பு தேர்வில் அபாரம்
/
குன்னத்துார் கொங்கு மெட்ரிக் 10ம் வகுப்பு தேர்வில் அபாரம்
குன்னத்துார் கொங்கு மெட்ரிக் 10ம் வகுப்பு தேர்வில் அபாரம்
குன்னத்துார் கொங்கு மெட்ரிக் 10ம் வகுப்பு தேர்வில் அபாரம்
ADDED : மே 13, 2024 12:16 AM

திருப்பூர்;குன்னத்துார் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. கவிமதி முதலிடம்(564 மதிப்பெண்); அஸ்வதா இரண்டாமிடம்(551 மதிப்பெண்), திவாகர் மூன்றாமிடம் (548 மதிப்பெண்) பெற்றுள்ளனர். பல்வேறு பாடங்களில் மாணவர் பலர், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வில், லீபிகாஸ்ரீ 495 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடம்; பள்ளியில் முதலிடம் பெற்று; 3 பாடங்களில் சென்டம் பெற்றார். சுபரஞ்சனி இரண்டாமிடம்(490 மதிப்பெண்); தர்ஷினி மூன்றாம் இடம்(482 மதிப்பெண்; கணிதத்தில் சென்டம்) பெற்றனர். விஷாலினி, நேகா, பிரேம் குமார் ஆகியோர் கணிதத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்தனர்.
கே.ஜி., முதல் பிளஸ் 1 வகுப்பில் 4 குரூப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் 475 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்களுக்கு 100 சதவீதம், 450 முதல் 474 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு 50 சதவீதம், 425 முதல் 449 எடுத்தவர்களுக்கு 25 சதவீதம், 400 முதல் 424 எடுத்தவர்களுக்கு 15 சதவீதம், 350 முதல் 399 எடுத்தவர்களுக்கு 10 சதவீதம் கல்விக்கட்டணத்தில் சலுகை வழங்கப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைவர் கமல், தாளாளர் அப்புசாமி, செயலாளர் முத்து சக்திவேல், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.