ADDED : ஜூன் 11, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;நில அளவை பணி மேற்கொள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தெரிவித்தார்.
கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
நிலங்களை அளவீடு செய்வதற்கு, https://tamilnilam.tn.gov.in/citizen என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதியை, கடந்த 2023 நவம்பர் மாதம் முதல்வர் துவக்கி வைத்தார்.
இந்த சேவை வாயிலாக, பொதுமக்கள் நில அளவை செய்வதற்கு, எந்நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நில அளவை கட்டணம் செலுத்துவதற்கு வங்கி களுக்கு செல்லவேண்டிய அவசியமும் இல்லை. நில அளவை தேதி விவரங்கள், மனுதாரருக்கு மொபைல் போனில் தெரிவிக்கப்படும். நில அளவை செய்யப்பட்டபின், நில அளவையாளர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் ஆகியவற்றை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.