/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிலச்சரிவால் பாதிப்பு; ராம்ராஜ் காட்டன் நிவாரணம்
/
நிலச்சரிவால் பாதிப்பு; ராம்ராஜ் காட்டன் நிவாரணம்
ADDED : ஆக 06, 2024 11:29 PM

திருப்பூர் : நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில் கேரள முதல்வரிடம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
வயநாடு பகுதியில் நிவாரணப் பணிக்காக, ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில் அதன் நிறுவனர் நாகராஜ், 25 லட்சம் ரூபாய் மற்றும் ராம்ராஜ் காட்டன் விளம்பர துாதரான நடிகர் ஜெயராம், 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கினர்.
திருச்சூரில் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து இருவரும் நிதியை வழங்கினர்.மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடிகர் ஜெயராம் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராம்ராஜ் காட்டன் சார்பில் வேட்டி சர்ட்களை வழங்கவுள்ளார்.
இது குறித்து, ராம்ராஜ் நிறுவனர் நாகராஜ் கூறுகையில், ''நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரும் வகையில் தேவையான உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம். நிவாரணப் பணிகளில் பங்கேற்பதோடு, அப்பகுதி மக்களுக்கு வேட்டி சர்ட் வழங்கப்படும்,'' என்றார்.