/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிலச்சரிவு: வயநாடு மக்களுக்கு 'பேமிலி கிட்' ; பனியன் உற்பத்தியாளர் சங்கத்தினர் வழங்கல்

ADDED : ஆக 06, 2024 11:24 PM

திருப்பூர் : திருப்பூர் சிறு குறு பனியன் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், வயநாடு மக்களுக்கு, 8.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் நேரடியாக வழங்கப்பட்டது.
வயநாடு நிலச்சரிவால் பாதித்த மக்களுக்கு, தமிழக மக்கள், பொதுநல அமைப்புகள், தொழில்துறையினர் உதவி செய்து வருகின்றனர். மீட்கப்பட்ட மக்கள், 100க்கும் அதிகமான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் சிறு குறு பனியன் உள்நாட்டு உற்பத்தியாளர் சங்கத்தினர், பொருட்களை சேகரித்து, நிவாரணமாக வழங்கினர். மொத்தம், 600 குடும்பங்களுக்கு தேவையான, அரிசி, பெட்ஷீட், துண்டு, லுங்கி, நைட்டி, ஆடைகள், நாப்கின், டார்ச் லைட், பிஸ்கட் போன்ற 20க்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கிய, 'பேமிலி கிட்' வழங்கப்பட்டது.
துணை கலெக்டர் அகிலா மாதவன் முன்னிலையில், மேப்பாடி அரசு பள்ளி முகாமில் இருந்த 200 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
கல்பெட்டா எம்.எல்.ஏ., சித்தீக் முன்னிலையில், 150 பயனாளிகளுக்கும், காங்., தலைவர் அப்பச்சன் வாயிலாக, 125 பயனாளிகள், வயநாடு சேவை குழு வாயிலாக, 125 பயனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
சங்க தலைவர் முகமது ஜோயா ஷபி, பொருளாளர் அப்துல் அஜீஸ், குர்பானி டிரஸ்ட் பைசல் உட்பட நிர்வாகிகள், நிவாரண பொருட்களை கொண்டு சென்று வழங்கியுள்ளனர்.