ADDED : ஆக 29, 2024 02:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசின், மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வக்கீல்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூரில் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டு, கோர்ட் முன்பு, மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நுாற்றுக்கணக்கான வக்கீல்கள் பங்கேற்றனர். மத்திய அரசு இந்த சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். இதன் காரணமாக வழக்கமான கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டன.