/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சட்ட உதவி ஆலோசகர்; விண்ணப்பிக்க அழைப்பு
/
சட்ட உதவி ஆலோசகர்; விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 05, 2024 11:52 PM
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிக்கை:திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில், சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு என்ற பிரிவுக்கு, தகுதி மற்றும் திறமை வாய்ந்த வக்கீல்களிடம் இருந்து, துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பணியிடங்களுக்கு, தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி, தேர்வு முறை, விண்ணப்பம் மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி குறித்த பிற தகவல்களுக்கு, திருப்பூர் மாவட்ட நீதிமன்ற இணைய தளத்தை, http://districts.ecourts.gov.in/tiruppur பார்வையிடலாம்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.