/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சட்ட விழிப்புணர்வு முகாம் மாணவியருக்கு விழிப்புணர்வு
/
சட்ட விழிப்புணர்வு முகாம் மாணவியருக்கு விழிப்புணர்வு
சட்ட விழிப்புணர்வு முகாம் மாணவியருக்கு விழிப்புணர்வு
சட்ட விழிப்புணர்வு முகாம் மாணவியருக்கு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 31, 2024 12:19 AM
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், 'மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம்' முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
விழுதுகள் தன்னார்வ அமைப்பு, எல்.ஆர்.ஜி., கல்லுாரி என்.எஸ்.எஸ்., ஆகியன இணைந்து இம்முகாமை நடத்தின. 'விழுதுகள்' திட்ட மேலாளர் சந்திரா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் தமிழ்மலர் முன்னிலை வகித்தார். நீதிபதி ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
நீதிபதி பேசுகையில், 'அனைவரும் தனிப்பட்ட முறையில் தங்களைக் காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும். பிறர் வாயிலாக ஏதேனும் அச்சுறுத்தல் வரும்போது அதை தைரியமாக எதிர் கொள்ள வேண்டும்,' என்றார்.
முகாமில், விழுதுகள் அமைப்பு இயக்குநர் தங்கவேல், கோவிந்தராஜ், வக்கீல் தமயந்தி, பேராசிரியர் வித்யா உட்பட பலர் பேசினர். தொடர்ந்து மனித கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. சுமதி நன்றி கூறினார்.