ADDED : ஜூலை 08, 2024 10:46 PM

குப்பை தேக்கம்
திருப்பூர், நான்காவது வார்டு, நெருப்பெரிச்சல், திருமலை நகரில் குப்பை அள்ள வேண்டும். தேங்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- அஸ்லாம், நெருப்பெரிச்சல்.
பல்லடம், கரைப்புதுார் ஊராட்சி, மீனம்பாறையில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். வழிநெடுகிலும் குப்பை தேங்கியுள்ளதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- செல்வராஜ், மீனம்பாறை. (படம் உண்டு)
பாதி ரோடு தான்...
திருப்பூர் வீரபாண்டியில் இருந்து கோவில்வழி செல்லும் ரோடு குண்டும் குழியுமாக பாதி ரோடு தான் உள்ளது. ரோடு போட வேண்டும்.
- சத்யபிரியா, கோவில்வழி. (படம் உண்டு)
திருப்பூர், சந்திராபுரம், ராஜிவ்காந்தி நகரில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை குழியாகியுள்ளது. குழாய் உடைப்பை சரிசெய்து, ரோடு போட வேண்டும்.
- ராமராஜ், சந்திராபுரம். (படம் உண்டு)
அபாய மின்கம்பம்
திருப்பூர், அவிநாசி ரோடு, 13 வது வார்டு, காந்தி நகர், ராம்ராஜ் ரோட்டில் விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.
-- சிவசுப்ரமணி, காந்தி நகர். (படம் உண்டு)
கால்வாய் அடைப்பு
திருப்பூர், பாரப்பாளையம், திருநகர், இரண்டாவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.
- அக் ஷயாஸ்ரீ, பாரப்பாளையம். (படம் உண்டு)
கரடுமுரடு சாலை
பல்லடம் - அருள்புரம் ரோடு, உப்பிலிபாளையம், அண்ணாநகரில் ஜல்லிக்கற்களுடன் கரடுமுரடாக சாலை உள்ளது. 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.
- கிருஷ்ணமூர்த்தி, உப்பிலிபாளையம். (படம் உண்டு)
திருப்பூர், அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் சிக்னலில் இருந்து செல்லும் பங்களா வீதி சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வளைவில் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். சீரமைக்க வேண்டும்.
- தேவசகாயம், பங்களா வீதி. (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர், பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம், காமராஜர் வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது. உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- சிவா, காமராஜர் வீதி. (படம் உண்டு)
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கருமாரம்பாளையம், வாய்க்கால்மேடு பகுதியில் கேட்வால்வு பழுதாகியுள்ளது. தொடர்ந்து தண்ணீர் வெளியாகி, பாசிபடர்ந்து காணப்படுகிறது.
- சங்கர்சதீஷ், வாய்க்கால்மேடு. (படம் உண்டு)
மின்சாரம் வீண்
திருப்பூர், கொங்கு நகர், ஒற்றைக்கண் பாலம் அருகே பகலிலும் தெருவிளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது. மின்சாரம் வீணாவதை தடுக்க வேண்டும்.
- புஷ்பராஜ், கொங்குநகர். (படம் உண்டு)
ரியாக் ஷன்
ரோடு போட்டாச்சு
திருப்பூர், அனுப்பர்பாளையம் - ஆத்துப்பாளையம் ரோடு, மாரியம்மன் கோவில் வீதி, ரோடு குண்டும் குழியுமாக இருப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி மூலம் சிமென்ட் ரோடு போட்டுள்ளனர்.
- ராஜ்குமார், அனுப்பர்பாளையம். (படம் உண்டு)
குப்பை அள்ளிட்டாங்க...
திருப்பூர், ெஷரீப் காலனி, குறிஞ்சி நகர் விரிவு பகுதியில் தேங்கியிருந்த குப்பை, கழிவுகள் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின் அகற்றப்பட்டது.
- மணிகண்டன், குறிஞ்சி நகர் விரிவு. (படம் உண்டு)