/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கிணற்றை காணோம் கண்டுபிடிச்சு தாங்க'
/
'கிணற்றை காணோம் கண்டுபிடிச்சு தாங்க'
ADDED : ஆக 06, 2024 06:42 AM
பல்லடம்: பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சி, தேவராயம்பாளையம் கிராம மக்கள் தாசில்தாரிடம் அளித்துள்ள புகார் மனு:
தேவராயம்பாளையம் கிராமத்தில் பொதுக் கிணறு மற்றும் அரசுக்கு சொந்தமான நிலத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் நிழற்குடையும் உள்ளது. கிணறு மற்றும் 40 ஆண்டுகளாக பயன்பட்டு வந்த நிழற்குடையை ஆக்கிரமித்து தனியார் ஒருவர் மூலம் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. உரிய ஆய்வு மேற்கொண்டு, மீண்டும் இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.
அப்பகுதியினர் கூறுகையில், 'கிணறும், நிழற்குடையும் திடீரென மாயமாகியுள்ளன. காணாமல் போன கிணற்றை கண்டுபிடித்து தருவதுடன், நிழற்குடையையும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தர வேண்டும். உரிய அளவீடு செய்து அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம்,' என்றனர்.