/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தேசத்தை மட்டுமல்ல... பசுமையையும் காப்போம்'
/
'தேசத்தை மட்டுமல்ல... பசுமையையும் காப்போம்'
ADDED : செப் 17, 2024 11:49 PM

பல்லடம் : இந்தியா ராணுவம் மற்றும் கோடங்கிபாளையம் ஊராட்சி இணைந்து, இந்திய ராணுவத்தின், 110வது காலாட்படை பிரிவின், 75வது ஆண்டு பவள விழா கொண்டாட்டம், சங்கோதிபாளையம் மகிழ்வனம் தாவரவியல் பூங்காவில் நேற்று நடந்தது.
கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். பூங்கா செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். கோவை பிரிவு ராணுவ தளபதி கர்ணன் ஹரிஷ் ராமச்சந்திரன், துணை ராணுவ தளபதி விக்ரம் சிங் யாதவ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
கர்னல் ஹரிஷ் ராமச்சந்திரன் பேசுகையில், ''இந்திய ராணுவத்தின், 110வது காலாட்படை பிரிவின், 75ம் ஆண்டு விழாவில் மரக்கன்றுகள் நாட்டு வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். உலகெங்கும் பசுமை பரவ வேண்டும் என விரும்புகிறோம்,'' என்றார்.
முன்னதாக, ராணுவத்தின், 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தாவரவியல் பூங்காவில், 400க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. திருப்பூர் மாவட்ட முன்னாள் என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியம், ஹார்வெஸ்ட் நிறுவன தலைவர் பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் ஆறுமுகம், கணேசன் மற்றும் ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.

