/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மஞ்சப்பையை கையில் எடுப்போம்... பாலிதீன் பைகளுக்கு ' குட்பை ' சொல்வோம்! உறுதிமொழி ஏற்றுக் கொண்ட மாணவியர்
/
மஞ்சப்பையை கையில் எடுப்போம்... பாலிதீன் பைகளுக்கு ' குட்பை ' சொல்வோம்! உறுதிமொழி ஏற்றுக் கொண்ட மாணவியர்
மஞ்சப்பையை கையில் எடுப்போம்... பாலிதீன் பைகளுக்கு ' குட்பை ' சொல்வோம்! உறுதிமொழி ஏற்றுக் கொண்ட மாணவியர்
மஞ்சப்பையை கையில் எடுப்போம்... பாலிதீன் பைகளுக்கு ' குட்பை ' சொல்வோம்! உறுதிமொழி ஏற்றுக் கொண்ட மாணவியர்
ADDED : ஜூலை 04, 2024 05:26 AM

திருப்பூர்: ''பாலிதீன் பயன்பாட்டின் ஆபத்து குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது; துணிப்பை பயன்பாடு அதிகரித்து வருகிறது,'' என, கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசினார்.
சர்வதேச பாலிதீன் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், ஜெய்வாபாய் மேல்நிலைப்பள்ளியில், 'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், 1,500 மாணவியருக்கு மஞ்சப்பை வழங்கி, கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:
ஒருமுறை மட்டும் பயன்படுத்தி துாக்கி எறியும் பாலிதீன் பைகள், சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கின்றன. மண்ணில் போடப்படும் பாலிதீன் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள், மக்குவதற்கு பல ஆண்டுகளாகின்றன. நீர் நிலைகளில் போடும்போது, அங்குள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
பாலிதீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து, மாற்று வழிகளை கடைபிடிப்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் ஜூலை 3 சர்வதேச நெகிழிப்பை இல்லாத தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுகட்டுப்பாடு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலிதீன் பயன்பாட்டின் ஆபத்தை மக்கள் உணர துவங்கி விட்டனர்; மக்கள் மத்தியில் பாலிதீன் பயன்பாடு குறைந்து, துணிப்பை பயன்பாடு அதிகரிக்க துவங்கியுள்ளது.
எதிர்கால தலைமுறையினருக்கு சிறந்த சுற்றுச்சூழலை வழங்கவேண்டியது நாம் ஒவ்வொருவரின் கடமை. ஆரோக்கியமாக வாழ, அனைவரும், பாலிதீன் தவிர்த்து, மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்தவேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
தொடர்ந்து, கலெக்டர் உள்பட அரசு அதிகாரிகள், மாணவியர், ஆசிரியர் அனைவரும் கையில் மஞ்சப்பை ஏந்தியவாறு, 'பாலிதீன் பைகளை பயன்படுத்த மாட்டோம்; மஞ்சப்பையை பயன்படுத்து வோம்' என உறுதிமொழி எடுத்தனர்.
நிகழ்ச்சியில், மாசுகட்டுப்பாடு வாரிய பொறியாளர் (வடக்கு) செந்தில்குமார், மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி (தனியார் பள்ளிகள்), தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா அமலோற்பவமேரி, மாசுகட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் பாரதிராஜா மற்றும் மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பாலிதீன் பயன்பாட்டின் ஆபத்தை மக்கள் உணர துவங்கி விட்டனர்; மக்கள் மத்தியில் பாலிதீன் பயன்பாடு குறைந்து, துணிப்பை பயன்பாடு அதிகரிக்க துவங்கி உள்ளது