/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேவதி மெடிக்கல் சென்டர் சார்பில் எல்.ஐ.சி., ஆபீசில் மருத்துவ முகாம்

ADDED : செப் 09, 2024 12:28 AM

திருப்பூர்:அவிநாசி எல்.ஐ.சி., கிளை அலுவலகத்தில், 68வது ஆண்டு விழாவையொட்டி, இன்சூரன்ஸ் ஏஜென்ட்கள், பொதுமக்கள், எல்.ஐ.சி., நிறுவனப்பணியாளர்கள் பயன்படும் வகையில், ரேவதி மெடிக்கல் சென்டர், ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச இருதயப் பரிசோதனை, பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை கிளை மேலாளர் பாரதிமணி துவக்கிவைத்தார்.
முகாமில் 130க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முப்பது பேருக்கு இலவச இருதய ஸ்கேன், இருதய சுருள் பட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 15 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். மருத்துவக்குழுவினருக்கு கிளை மேலாளர் பாராட்டு தெரிவித்தார்.
இத்தகவலை ரேவதி மெடிக்கல் சென்டர் தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார்.