/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பணிபுரியும்போது விபத்தில் இறந்தால் குடும்பத்தினருக்கு வாழ்நாள் ஓய்வூதியம்'
/
'பணிபுரியும்போது விபத்தில் இறந்தால் குடும்பத்தினருக்கு வாழ்நாள் ஓய்வூதியம்'
'பணிபுரியும்போது விபத்தில் இறந்தால் குடும்பத்தினருக்கு வாழ்நாள் ஓய்வூதியம்'
'பணிபுரியும்போது விபத்தில் இறந்தால் குடும்பத்தினருக்கு வாழ்நாள் ஓய்வூதியம்'
ADDED : ஆக 23, 2024 12:30 AM

பல்லடம்;பல்லடம், செட்டிபாளையம் ரோடு, கே.அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 52. பல்லடம் பனப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த, 2023 ஜூன் மாதம் பணி தொடர்பாக காரில் சென்று திரும்பும் போது, விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.
பல்லடம் இ.எஸ்.ஐ., கிளை அலுவலகத்தில் நேற்று மணிகண்டன் குடும்பத்தினருக்கு சார்ந்தோர் உதவி பயனாக, 20,230 ரூபாய் மற்றும் மனைவி, மகள் மற்றும் மகனுக்கு மாதந்தோறும் ஓய்வூதியமாக, 17,422 ரூபாய் வழங்குவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. கோவை மண்டல துணை இயக்குனர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் பெருமாள், கிளை மேலாளர் ராஜா, தனியார் நிறுவன உரிமையாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை இயக்குனர் கூறுகையில், 'பணியின் போது விபத்தில் இறந்தால், இ.எஸ்.ஐ., சட்டப்படி, அவரது குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியம் மற்றும் உதவி பயன் கிடைக்கும். இறந்தவரின் மனைவி மற்றும் பெற்றோருக்கு வாழ்நாள் முழுவதும், ஆண் குழந்தையானால், 25 வயது வரையும், பெண் குழந்தையாக இருந்தால் திருமணம் ஆகும் வரையும், சார்ந்தோர் உதவி பயன் பகிர்ந்து அளிக்கப்படும்' என்றார்.
---
விபத்தில் உயிரிழந்த டிரைவரின் குடும்பத்தினருக்கு வாழ்நாள் ஓய்வூதிய ஆணையை, இ.எஸ்.ஐ., கோவை மண்டல துணை இயக்குனர் கார்த்திகேயன் வழங்கினார்.

