/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சில்லறைக்கு பதில் டோக்கன்; மார்க்கெட்டில்தான் 'இப்படி'
/
சில்லறைக்கு பதில் டோக்கன்; மார்க்கெட்டில்தான் 'இப்படி'
சில்லறைக்கு பதில் டோக்கன்; மார்க்கெட்டில்தான் 'இப்படி'
சில்லறைக்கு பதில் டோக்கன்; மார்க்கெட்டில்தான் 'இப்படி'
ADDED : ஆக 04, 2024 05:09 AM

திருப்பூர் : திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் வாகன ஓட்டிகள், ஐந்து ரூபாய் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும்.
நாள் ஒன்றுக்கு, ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் வந்து சென்றாலும், ஒப்பந்தம் எடுத்துள்ள மூன்று பேர் மாறிமாறி சில்லறை கொடுத்து வந்தனர். ஆட்டோ, வேன், லாரிகளுக்கு, 25 முதல், 50 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஐந்து ரூபாய் சில்லறைக்கு, காசு வழங்காமல், டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கனில், தினசரி மார்க்கெட் சுங்ககேட் என எழுதப்பட்டுள்ளது.
அடுத்த முறை வரும் போது இதனையே திருப்பி கொடுங்கள் என கொடுத்து அனுப்புகின்றனர். 'காய்கறிகள் மொத்தமாக வாங்கினால், விலை குறைவு என்பதை எதிர்பார்த்து தான் இங்கு வருகிறோம். ஆனால், ஐந்து ரூபாய்க்கு கூட சில்லறை தராமல், டோக்கன் வழங்கினால், எப்படி?' என்று முணுமுணுக்கின்றனர்,மொத்த வியாபாரிகள்.