/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வித்யா விகாஸ் பள்ளியில் நாளை இலக்கியப் போட்டி
/
வித்யா விகாஸ் பள்ளியில் நாளை இலக்கியப் போட்டி
ADDED : ஜூலை 10, 2024 11:49 PM
திருப்பூர் : திருப்பூர், குளத்துப்பாளையம், வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் தண்டபாணி நினைவு நாளையொட்டி (ஜூலை 14) 2017 முதல் ஆண்டு தோறும் மெட்ரிக் பள்ளிகளுக்கிடையேயான இலக்கியப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தாண்டு வரும் 12ம் தேதி (நாளை) போட்டி நடக்கிறது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்; அதிக வெற்றிப்புள்ளி பெறும் பள்ளிக்கு 'தண்டபாணிஜி டிராபி'யும், இரண்டாம் இடம் பெறும் பள்ளிக்கு 'ரன்னர்அப் டிராபி'யும் வழங்கப்படும். 21 பள்ளிகளில் இருந்து 1,200 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இத்தகவலை நிர்வாக அலுவலர் சிவகுருநாதன்(மொபைல்போன்: 99944 01789) தெரிவித்துள்ளார்.