/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நீரோடை'யில் சங்கமித்த இலக்கிய ஆர்வலர்கள்
/
'நீரோடை'யில் சங்கமித்த இலக்கிய ஆர்வலர்கள்
ADDED : பிப் 23, 2025 02:38 AM

அவிநாசி: அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள ரோட்டரி அரங்கில் நீரோடை இலக்கிய அமைப்பு மற்றும் ரோட்டரி அவிநாசி இணைந்து முப்பெரும் இலக்கியத் திருவிழாவை நடத்தின.
இலக்கிய விழா, மகேஷ் எழுதிய சிறார் நுால் வெளியீட்டு விழா, விருதுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் சந்திரன் தலைமை வகித்தார். ரோட்டரி தலைவர் தண்டபாணி வரவேற்றார். நீரோடை இலக்கிய அமைப்பின் நிறுவனர் மகேஷ் சிறப்புரையாற்றினார்.
எழுத்தாளர்கள் சந்திர மனோகரன், நிழலி ஆகியோருக்கு இலக்கிய விருதுகளை, விஜயா பதிப்பக நிறுவனர் வேலாயுதம் வழங்கி பேசினார். அவிநாசி அரசு கலை கல்லுாரி பேராசிரியர் மணிவண்ணன் பேசினார்.
'சிறுவர்கள்' நுாலை பழனிசாமி வெளியிட, கதை சொல்லி சண்முகவள்ளி மதிப்புரை வழங்கினார். ரோட்டரி நிர்வாகிகள், உறுப்பினர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.