/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு: பிரம்பு - கற்பூரம் வைத்து பூஜை
/
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு: பிரம்பு - கற்பூரம் வைத்து பூஜை
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு: பிரம்பு - கற்பூரம் வைத்து பூஜை
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு: பிரம்பு - கற்பூரம் வைத்து பூஜை
ADDED : மார் 07, 2025 07:20 AM

திருப்பூர் : சிவன்மலை கோவில், ஆண்டவர் உத்தரவு பெட்டியில் நேற்று, பிரம்பு மற்றும் சூடம் வைத்து நேற்று பூஜை நடந்தது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் - சிவன்மலையிலுள்ள ஸ்ரீசுப்பிரமணியர் கோவிலில், ஆண்டவர் உத்தரவு பெட்டி வழிபாடு நடைமுறையில் உள்ளது. பக்தர்கள் கனவில் தோன்றி, முருகப்பெருமான் உணர்த்தும் பொருட்கள், உத்தரவு பெட்டியில் வைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி, கடந்த மாதம், 25ம் தேதி, வைக்கோல் கட்டு வைத்து பூஜை நடந்தது.
வைக்கோல் வைக்கப்பட்ட, 10 வது நாளான நேற்று, உத்தரவு பொருள் மாறியுள்ளது. அதன்படி, பிரம்பு மற்றும் கற்பூரம் வைத்து பூஜை நடந்தது. அருள்வாக்கு கூறுபவர்கள் வைத்திருக்கும் மணிப்பிரம்பு, முதியவர்கள் வைத்திருக்கும் கைத்தடி போன்ற பிரம்பு மற்றும் கற்பூரம் ஆகியன பூஜையில் வைக்கப்பட்டுள்ளதாக, சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பொருள் குறித்து, கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமி கூறுகையில், ''மணிப்பிரம்பு வைத்திருப்பதால், அருள்வாக்கு கூறும் நபர்கள் பிரபலமடைவர்.
கோவில்களில் அருள்வாக்கு கேட்பதும் அதிகரிக்கும்; அருளாளர்களின் வாக்கு பலிதமாகி, பிரசித்தி பெறவும் வாய்ப்புள்ளது. இறைவழிபாட்டில், கற்பூரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இறைவன் முன் கற்பூரம் ஏற்றி வைத்து வழிபடுவது, ஜோதி வழிபாட்டுக்கு சமமானது. அதன்படி, பிரகாசமான நிகழ்வுகள் அதிகம் நடக்கவும் வாய்ப்புள்ளது,'' என்றார்.