நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூரை அடுத்த சாமளாபுரத்தில் அனுமதியின்றி முறைகேடாக கிராவல் மண் திருடப்படுவதாக கனிமவளத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரி டிரைவர் விஸ்வநாதனிடம், அனுமதி சீட்டு இல்லாமல் இருந்தது தெரிந்தது. மூன்று யூனிட் கிராவல், லாரியை பறி முதல் செய்தனர். புகாரின் பேரில், டிரைவர் விஸ்வநாதன், உரிமையளர் தமிழர சனிடம் மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.