/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தாமரை' மலர்ச்சி; தேசத்தின் வளர்ச்சி் :பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் ஓட்டு வேட்டை
/
'தாமரை' மலர்ச்சி; தேசத்தின் வளர்ச்சி் :பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் ஓட்டு வேட்டை
'தாமரை' மலர்ச்சி; தேசத்தின் வளர்ச்சி் :பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் ஓட்டு வேட்டை
'தாமரை' மலர்ச்சி; தேசத்தின் வளர்ச்சி் :பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் ஓட்டு வேட்டை
ADDED : ஏப் 12, 2024 12:26 AM

திருப்பூர்;''ஜெயிக்க கூடிய சின்னத்துக்கு ஓட்டளியுங்கள்; மற்றவர்களுக்கு அளித்து ஓட்டை சிதறடிக்க வேண்டாம்,'' என்று, திருப்பூரில் பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் ஓட்டு சேகரித்தார்.
திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிக்கு உட்பட்ட சாமுண்டிபுரம், வளையன்காடு உள்ளிட்ட பகுதியில் பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் ஓட்டு சேகரித்தார். பொதுமக்கள், கட்சியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மக்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். அங்குள்ள பள்ளிவாசல் முன்பு இஸ்லாமியரிடம் ஓட்டு சேகரித்து, மத்திய அரசின் திட்டங்கள்; மோடியால் நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
அவர் பேசியதாவது:
பிரதமர் மோடி வழங்க கூடிய ஹஜ் மானிய சலுகையை, வேறு எந்த அரசும் வழங்கியது கிடையாது. சவுதியில் இருக்க கூடிய நமது சகோதரர்களுக்கும், அந்த நாட்டுக்கும் மோடி குறித்து தெரியும். அந்நாட்டு மன்னருக்கு மிகவும் பிடித்த தலைவர், மோடி. எல்லோருடன் சேர்ந்தும், எல்லோருக்குமான வளர்ச்சி தான், பா.ஜ., வின் தாரக மந்திரம். வெற்றி பெறக்கூடிய கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி. ஜெயிக்க கூடிய சின்னமான தாமரைக்கு ஓட்டுகளை அளித்து, 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்கு, இந்த வரவேற்பு ஒன்றே சாட்சி. மற்றவர்களுக்கு அளித்து ஓட்டுகளை சிதறடிக்க வேண்டாம். பிரதமர் மோடி, மூன்றாவது முறையாக மிகப்பெரிய வெற்றி பெறுவார். இவ்வாறு, அவர் பேசினார்.

