/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காதல் விவகாரம்; வாலிபருக்கு வெட்டு
/
காதல் விவகாரம்; வாலிபருக்கு வெட்டு
ADDED : ஜூன் 18, 2024 11:39 PM
திருப்பூர்:திருப்பூர், பெரிய தோட்டம், 5வது வீதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ், 23. அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அப்துல் அஜீஸை தொடர்பு கொண்ட அந்த பெண்ணின் சகோதரர் அப்துல் ரகுமான், தன் தங்கையுடனான காதல் விவகாரம் குறித்து பேச வேண்டும் எனக் கூறி, நொய்யல் ஆறு மின் மயானம் பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.
அவரும் வந்த நிலையில், காதலை தவிர்க்கு மாறு, அப்துல்ரகுமான் கூற, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், அப்துல் ரகுமான் தனது நண்பர்கள், 3 பேருடன் சேர்ந்து, அப்துல் அஜீைஸ அரிவாளால் சராமாரியாக வெட்டியுள்ளனர். பொதுமக்கள் சிலர் வந்ததால், அப்துல் ரகுமான், அவரது நண்பர்கள் தப்பியோடினர்.
அப்துல் அஜீஸ், கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.