நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர் அமராவதிபாளையத்தில் திங்கள் தோறும் கால்நடைச்சந்தை நடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள், கேரளாவில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மாடுகளை வாங்க, விற்க வருவர்.
நேற்று நடந்த சந்தைக்கு, 792 மாடுகள் வந்தன. கன்றுகுட்டி, 3,500 - 4,500 ரூபாய், காளை, 23 ஆயிரம் - 25 ஆயிரம், எருது, 28 ஆயிரம் - 31 ஆயிரம், மாடுகள், 26 ஆயிரம் - 30 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. மாட்டுச்சந்தைக்கு கால்நடை வரத்து குறைந்திருந்தது; நேற்று சந்தையில், ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, மாட்டுச்சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.