/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைவழுத்த மின்சாரம்; மோட்டார் பழுதாகிறது
/
குறைவழுத்த மின்சாரம்; மோட்டார் பழுதாகிறது
ADDED : மார் 06, 2025 06:27 AM
பொங்கலுார்; திருப்பூர் மாவட்டத்தின், புறநகர் பகுதியான பொங்கலுார் பகுதியில் புதிய தொழில்கள் கணிசமான அளவு துவங்கப்பட்டு வருகின்றன.
இப்பகுதி விவசாயம் அதிகம் நடக்கும் பகுதி ஆகும். மின்வாரியம் தொழில்துறைக்கு தனியாக மின்பாதை அமைக்காமல் விவசாய மின் இணைப்புடன் கலந்து கொடுத்து வருகிறது.
இதனால், அடிக்கடி குறைவழுத்த மின்சாரம் வருகிறது. விவசாயிகளும் டிஜிட்டல் மீட்டர் பொருத்தியுள்ளதால் எவ்வளவு மின்சாரம் வருகிறது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்கின்றனர். திடீரென குறைவழுத்த மின்சாரம் வருவதால் மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாகி விவசாயிகளுக்கு பெரும் கடன் சுமையை ஏற்படுத்துவதாக விவசாயிகள் மின்வாரியம் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, பெருந்தொழுவு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன் கூறுகையில், ''இரவு மற்றும் விடுமுறை தினங்களிலும் மட்டுமே சீரான மின்சாரம் கிடைக்கிறது. பகல் நேரத்தில் விவசாய பணிகளை செய்யவே முடிவதில்லை. மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பயனில்லை. சீரான மின்சாரம் கிடைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.