/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எல்.ஆர்.ஜி., கல்லுாரி ஆபீஸ் தற்காலிகமாக இடமாற்றம்
/
எல்.ஆர்.ஜி., கல்லுாரி ஆபீஸ் தற்காலிகமாக இடமாற்றம்
ADDED : மே 06, 2024 11:36 PM

திருப்பூர்:எல்.ஆர்.ஜி., கல்லுாரி அலுவலகம், தற்காலிகமாக தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் செயல்பட துவங்கியது. திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரி வளாகத்தில், ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளின், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஸ்ட்ராங்ரூம்களில் வைக்கப்பட்டுள்ளன.
ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளதால், துப்பாக்கி ஏந்திய போலீசுடன், நான்கடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.
இந்நிலையில், மாணவியர் வசதிக்காக, எல்.ஆர்.ஜி., கல்லுாரியின் நிர்வாக அலுவலகம், தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது; நேற்று முதல், கல்லுாரி அலுவலகம் தற்காலிகமாக, பள்ளி வளாகத்தில் இயங்க துவங்கியுள்ளது. கல்லுாரி மாணவர் சேர்க்கை உட்பட, அனைத்து தேவைகளுக்கும், தற்காலிக அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.