/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எல்.ஆர்.ஜி., அரசு கல்லுாரி கவுன்சிலிங்; 16 பேர் தேர்வு
/
எல்.ஆர்.ஜி., அரசு கல்லுாரி கவுன்சிலிங்; 16 பேர் தேர்வு
எல்.ஆர்.ஜி., அரசு கல்லுாரி கவுன்சிலிங்; 16 பேர் தேர்வு
எல்.ஆர்.ஜி., அரசு கல்லுாரி கவுன்சிலிங்; 16 பேர் தேர்வு
ADDED : மே 31, 2024 01:25 AM

திருப்பூர்;திருப்பூர், எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண்உயிரியல், கணினி அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட, 17 பாடப்பிரிவுகள் உள்ளது.
மொத்தமுள்ள, 1,086 இடங்களுக்கு, 5,535 பேர் விண்ணப்பித்துள்ளனர். பொது கவுன்சிலிங் ஜூன், 10ம் தேதி துவங்க உள்ளது. முதல்கட்டமாக மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங், தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிகல் நடந்தது. மொத்தம், 35 பேர் விண்ணப்பித்த நிலையில், 16 பேர் தேர்வாகினர். கல்லுாரி முதல்வர் எழிலி மற்றும் பேராசிரியர் குழுவினர் கவுன்சிலிங் பணிகளை ஒருங்கிணைத்தனர்.