ADDED : ஆக 27, 2024 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருமுருகன்பூண்டி அருகே அம்மாபாளையம் மற்றும் ராக்கியாபாளையம் மா.கம்யூ., கிளை மாநாடு நடைபெற்றது.
கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், பாலசுப்ரமணியம், மோகனசுந்தரம், முருகன், ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்று பேசினர்.
அம்மாபாளையம் கிளை செயலாளர்களாக ராஜ், ஈஸ்வரன், ராக்கியாபாளையம் செயலாளராக ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டனர். இதில், மக்களின் அடிப்படை பிரச்னைகளை மனுவாக எழுதி உடனுக்குடன் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

