ADDED : ஜூலை 25, 2024 11:01 PM

அவிநாசி: அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி, வஞ்சிபாளையம் பகுதி கிளைகள் மா.கம்யூ., சார்பில், தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர் முருகன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியம், கிளைச் செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் மோகனசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர். ராஜா நன்றி கூறினார்.
திருப்பூர் வடக்கு ஒன்றிய மா.கம்யூ., கட்சி சார்பில், மின் கட்டண உயர்வை கண்டித்து, போயம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய குழு உறுப்பினர் பாண்டியன், தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்து கண்ணன், ஒன்றிய முன்னாள் செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் சிகாமணி, ஒன்றிய குழு உறுப்பினர் இளங்கோ, ஆகியோர் மின் கட்டண உயர்வை கண்டித்து பேசினர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, மகாலிங்கம், கோபால், தன்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

