/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊரக தொழில் முனைவோருக்காக மதி சிறகுகள் தொழில் மையம்
/
ஊரக தொழில் முனைவோருக்காக மதி சிறகுகள் தொழில் மையம்
ஊரக தொழில் முனைவோருக்காக மதி சிறகுகள் தொழில் மையம்
ஊரக தொழில் முனைவோருக்காக மதி சிறகுகள் தொழில் மையம்
ADDED : ஆக 08, 2024 11:11 PM
திருப்பூர்;கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
தமிழக அரசின், 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தின், ஓரிட சேவை மையமாக 'மதி சிறகுகள் தொழில் மையம்' செயல்படுகிறது. ஊரக தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு பல்வேறு வணிக மேம்பாட்டு ஆதரவு மற்றும் வணிக ஒருங்கிணைப்பு சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.இம்மையம் ஒருங்கிணைந்த சேவை மையமாக செயல்படும். தொழில் கருத்துருவாக்கம், அரசுத்துறை திட்டங்கள், வங்கிகளில் இருந்து கடன் பெறுவதற்கான வணிக திட்டம் தயாரித்தல், தொழில் நடத்துவதற்கான சான்றிதழ், பதிவு மற்றும் இணக்கம் பெறுதல், திட்ட மற்றும் துறை சார்ந்த நிபுணர்களிடம் இருந்து வழிகாட்டுதல், ஆதரவு சந்தைப்படுத்துதல், பிராண்டிங் என, பல்வேறு வணிக மேம்பாட்டு சேவைகள் வழங்கப்படுகின்றன.
தொழில் முனைவோராக விரும்புபவர்கள், தற்போது தொழில் செய்து கொண்டிருப்போர் மற்றும் தொழில் துவங்க திட்டமிடுபவர்கள், மிகக்குறைந்த செலவில், இந்த மையங்களில் இருந்து பல்வேறு சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். இச்சேவையை பெற, பல்லடம், அருள்புரத்தில் செயல்படும் மதி சிறகுகள் தொழில் மையத்தை அணுகலாம். விவரங்களுக்கு, 0421 - 2429904, 76390 - 03600 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.