/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுரை ஜவுளி பிரதிநிதிகள் 'சைமா'விடம் வலியுறுத்தல்
/
மதுரை ஜவுளி பிரதிநிதிகள் 'சைமா'விடம் வலியுறுத்தல்
ADDED : மார் 07, 2025 11:15 PM

திருப்பூர்; மதுரை அனைத்து ஜவுளி விற்பனை பிரதிநிதிகள் சங்க தலைவர் கார்த்திக் தலைமையிலான குழுவினர், நேற்று திருப்பூருக்கு வந்தனர்.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், 'சைமா' பொருளாளர் சுரேஷ்குமார், இணைச் செயலாளர் பழனிசாமி, செயற்குழு உறுப்பினர்கள் பொன்னுசாமி, நடராஜன் ஆகியோருடன், மதுரை குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
'ஜவுளித்துறை சார்ந்த வர்த்தக பிரதிநிதிகள், திருப்பூருக்கு வரும்போது, குறைந்த வாடகைக்கு தங்கும் விடுதிகள் இல்லை. திருப்பூரில் போதிய தங்கும் இட வசதிகளை ஏற்படுத்தவேண்டும்' என, மதுரை குழுவினர், 'சைமா' சங்க நிர்வாகிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.