/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜகன்மாதா ராஜராஜேஸ்வரி கோவில் 16ல் மஹா கும்பாபிேஷக விழா
/
ஜகன்மாதா ராஜராஜேஸ்வரி கோவில் 16ல் மஹா கும்பாபிேஷக விழா
ஜகன்மாதா ராஜராஜேஸ்வரி கோவில் 16ல் மஹா கும்பாபிேஷக விழா
ஜகன்மாதா ராஜராஜேஸ்வரி கோவில் 16ல் மஹா கும்பாபிேஷக விழா
ADDED : செப் 09, 2024 12:28 AM

அவிநாசி:அவிநாசி அடுத்த ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீபுரம் ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் மஹா கும்பாபிஷேக விழா 16ம் தேதி நடைபெறுகிறது.
நேற்று காலை கோவிலில் சுவாமிகள் கண் திறக்கும் வைபவம், கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, ஒட்டக பூஜை, பைரவ பூஜைகள் நடந்தன. பரிவார மூர்த்திகளுக்கு கண் திறக்கப்பட்டு சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றது. சபேச சிவாச்சாரியார் தலைமை தாங்கினார். கும்பகோணம் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், கோவில் சிறப்புகளை விளக்கினார். திருப்பூர் சாரதா சத்சங்கம் மஹாத்மானந்த சரஸ்வதி, ஜகன் மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி டிரஸ்ட் தலைவர் ஞானகுரு, ஸ்தபதி செல்வராஜ், சிற்பி தீபக், கும்பாபிஷேக விழா குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
----
ஐஸ்வர்யா கார்டனில், ஸ்ரீபுரம், ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.