ADDED : ஜூலை 17, 2024 08:46 PM

உடுமலை : உடுமலையில் நடந்த காஞ்சி மஹா பெரியவா அனுஷபூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உடுமலை ஜி.டி.வி., லே - அவுட் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், காஞ்சி மஹா பெரியவா அனுஷ பூஜை நேற்று நடந்தது.
இக்கோவிலில், மாலை, 4:00 மணிக்கு, ஸங்கல்பம், ஆத்ம பீட பூஜை, அனுஷ ப்ரதான பூஜை, குரு த்யானம், சித்ர பட ஆவாஹனம், காஞ்சி மஹா பெரியவா அஷ்டோத்ர அர்ச்சனைக்கு பிறகு நைவேத்யம், கற்பூர ஹாரத்தி காட்டப்பட்டது.
மேலும் விநாயகர் அகவல், சிவபுராணம், திருத்தொண்டர் தொகை, கோளறு திருப்பதிகம், பஞ்ச புராணம், கந்தசஷ்டி கவசம், விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட ஸ்லோக பாராயணம் நடைபெற்றது.
தொடர்ந்து சதுர்வேத பாராயணம், தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள், ஆன்மிக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.