/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராம ரோடுகளில் பாலங்கள் பராமரிப்பு
/
கிராம ரோடுகளில் பாலங்கள் பராமரிப்பு
ADDED : ஆக 17, 2024 12:32 AM

உடுமலை;மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்துக்குட்பட்ட கிராம ரோடுகளிலுள்ள, சிறு, குறு பாலங்களில் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், உடுமலை - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை சீசன் துவங்க உள்ளதால், உட்கோட்டத்துக்குட்பட்ட கிராம ரோடுகளில், பராமரிப்பு பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அவ்வகையில், பூளவாடி, காரத்தொழுவு, ஆத்துக்கிணத்துப்பட்டி, நீலம்பூர் உள்ளிட்ட இடங்களில், சிறு, குறு நடுத்தர பாலங்களில், பராமரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.
குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள பாலங்களில் இருபுறமும், துார்வாரப்பட்டு, மழை நீர் தடையின்றி செல்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகள் விரைவில் நிறைவு பெறும் என மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.