/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகிழம் பிராப்பர்ட்டீஸ் விருக்க்ஷா அவென்யூ வீட்டு மனை, வீடு விற்பனை துவக்கம்
/
மகிழம் பிராப்பர்ட்டீஸ் விருக்க்ஷா அவென்யூ வீட்டு மனை, வீடு விற்பனை துவக்கம்
மகிழம் பிராப்பர்ட்டீஸ் விருக்க்ஷா அவென்யூ வீட்டு மனை, வீடு விற்பனை துவக்கம்
மகிழம் பிராப்பர்ட்டீஸ் விருக்க்ஷா அவென்யூ வீட்டு மனை, வீடு விற்பனை துவக்கம்
ADDED : ஆக 04, 2024 11:30 PM

திருப்பூர் : திருப்பூர் - தாராபுரம் ரோடு, ரேவதி ரைஸ் மில் பஸ் ஸ்டாப், குப்பிச்சிபாளையம் பிரிவு பகுதியில் மகிழம் பிராபர்ட்டீஸ் நிறுவனம் அமைத்துள்ள விருக்க்ஷா அவென்யூ உள்ளது. இங்கு 5 லட்சம் ரூபாய் முன் பணம் செலுத்தி, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொந்த வீட்டை வாங்கலாம். துவக்க விழாவை முன்னிட்டு அதிரடி சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம்; கேட்டட் கம்யூனிட்டி; குடிநீர் உட்பட அனைத்து பாதுகாப்பு மற்றும் வசதிகளுடன் ஆறு ஏக்கர் பரப்பளவில் 110 வீட்டு மனைகள் அமைந்துள்ளன. மின்சார வசதி; கேட்டட் கம்யூனிட்டி; குடிநீர் வசதி ஆகியன உள்ளன.அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள். கோவில் வழி பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து மூன்று கி.மீ., தொலைவில், ஏஞ்சல் கல்லுாரி அருகில் உள்ளது.
நேற்று இப்புதிய வீட்டுமனை மற்றும் வீடு விற்பனை துவக்க விழாவை, லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி சேர்மன் மெஜஸ்டிக் கந்தசாமி - அங்காத்தாள், பன்னாட்டு லயன்ஸ் இயக்க முன்னாள் கவர்னர் பாலாஜி டிரான்ஸ்போர்ட்ஸ் ஜீவானந்தம் - பரிமளா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
மகிழம் பிராப்பர்ட்டீஸ் உரிமையாளர்கள் வரதராஜ், பாலசுப்ரமணியம், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜி.எஸ்.டி., ஒருங்கிணைப்பாளர் ஜெயகாந்தன், சி.என்.ஐ., சண்முகசுந்தரம், பகவதி பாபு, முஹம்மது ஷபி, மண்டல தலைவர் பிரகாஷ் ரவிச்சந்திரன், தேவராஜ், வெங்கடேஷ், பால்ராஜ், அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.