/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீட்டாட்டத்தில் பணத்தை இழந்தவர் கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயற்சி

ADDED : மார் 01, 2025 06:36 AM
திருப்பூர்;திருப்பூர், காந்தி நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 45. மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவி இருவரும் அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தனர்.
சரியாக வேலைக்கு செல்லாத கோபாலகிருஷ்ணன், கிளப்களுக்கு சென்று சீட்டு விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சில நாட்கள் முன் ஊத்துக்குளி அருகே உள்ள ஒரு கிளப்பில் சீட்டு விளையாடி, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை இழந்துள்ளார்.
விரக்தியான கோபால கிருஷ்ணன், நேற்று மாலை, 6:15 மணியளவில், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். தயாராக கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி, தீக்குளிக்க முயற்சித்தார். இதைப் பார்த்த போலீசார், பெட்ரோல் கேனை பறித்துவிட்டு, அவர்மீது தண்ணீர் ஊற்றினர்.
தன்னைப்போல் யாரும் சீட்டு விளையாடி பணத்தை இழந்துவிடக்கூடாது என எச்சரிப்பதற்காகவே தீக்குளிக்க முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
போலீசார் கோபாலகிருஷ்ணனை அழைத்துச் சென்று, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால், கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.