/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மங்கலம் பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்
/
மங்கலம் பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : செப் 16, 2024 12:19 AM

திருப்பூர் : மங்கலம், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீஆதிகேசவ பெருமாள், ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிேஷக யாகசாலை பூஜைகள், 13ம் தேதி மகா சுதர்ஸன ேஹாமம், விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது.
யாகசாலை பூஜைகள், பட்டாச்சார்களால் மேற்கொள்ளப்பட்டது. நான்காம் கால வேள்வி பூஜைகளை தொடர்ந்து, நேற்று காலை, கும்பாபிேஷகம் நடந்தது. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிேஷக விழாவையொட்டி, வள்ளி கும்மி, காவடியாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
முன்னதாக, சிலை பிரதிஷ்டை பணிகளை, அறநிலையத்துறை துணை கமிஷனர் ஹர்சினி நேரில் பார்வையிட்டார். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முத்துராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ---
கும்பாபிேஷகத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த, மங்க