/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மங்களூரு - பாட்னா 4ம் தேதி சிறப்பு ரயில்
/
மங்களூரு - பாட்னா 4ம் தேதி சிறப்பு ரயில்
ADDED : ஜூன் 01, 2024 11:20 PM
திருப்பூர்;வடமாநில பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க, வரும், 4ம் தேதி, மங்களூரு - பாட்னா இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன், 4ம் தேதி இரவு, 8:00 மணிக்கு மங்களூருவில் புறப்படும் ரயில், 7ம் தேதி, காலை, 5:30 க்கு பாட்னா சென்று சேரும். இந்த ரயிலில், ஆறு படுக்கை, 12 முன்பதிவில்லா பொது பெட்டி உட்பட, 19 பெட்டிகள் இடம் பெற்றிருக்கும்.
பாலக்காட்டில் இருந்து போத்தனுார் வழியாக திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக பயணிக்கும்; கோவைக்கு இந்த ரயில் செல்லாது. ஜூன், 5ம் தேதி அதிகாலை, 4:50க்கு திருப்பூர் ஸ்டேஷனுக்கு இந்த ரயில் வரும். அதிகம் பேர் பயணிக்க கூடும் என்பதால், 12 முன்பதிவில்லா பெட்டி, சிறப்பு ரயிலுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில்சார் ரயில் ரத்து
கோவையில் இருந்து சில்சாருக்கு வாராந்திர சிறப்பு ரயில் (எண்:12515) இயக்கப்படுகிறது. சில்சாரில் இருந்து கோவைக்கு இணை ரயில் வராததால், இன்று (2ம் தேதி) இரவு, 11:00 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட இருந்த சில்சார் எக்ஸ்பிரஸ் இயக்கம் முழுதும் ரத்து செய்யப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.