/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழமாகும் முன்னரே சந்தைக்கு வரும் மாங்காய்
/
பழமாகும் முன்னரே சந்தைக்கு வரும் மாங்காய்
ADDED : மே 04, 2024 12:14 AM

திருப்பூர்:மாங்காய் சீசன் துவங்காத நிலையில், விற்பனையை எதிர்பார்த்து பல்வேறு பகுதியில் இருந்து பழமாகும் முன்பே, மாங்காய்கள் விற்பனைக்கு திருப்பூர் கொண்டு வரப்படுகிறது. வாங்கும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
ஆந்திர மாநிலம் மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து மாம்பழம் விற்பனைக்கு திருப்பூர் கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக ஏப்ரல் முதல் வாரம் மாம்பழ சீசன் துவங்கும். மே துவக்கத்தில் அதிகரித்து ஜூன் வரை தொடரும்.
ஆனால், 'அல்போன்சா', 'மல்கோவா', 'பங்கனப்பள்ளி', 'செந்துாரம்' உள்ளிட்ட மாம்பழங்கள் சீசன் இன்னமும் முழுமையாக துவங்கவில்லை. வெயிலின் தாக்கத்தால், விளைச்சல் பாதித்து, வரத்தும் குறைந்துள்ளது.
இந்நிலையில் மாம்பழ விற்பனையை எதிர்பார்த்து, பழமாகும் முன்பே பல இடங்களில் இருந்து மாம்பழம் விற்பனைக்கு திருப்பூர் கொண்டு வந்து சேர்க்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் மாம்பழம் முழுமையாக பழுத்து, சுவை மிகுந்ததாக இல்லாமல், சற்று காயாக, நிறம் பெறாமல் உள்ளது.
இதனை அறியாமல் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். ஒரு சில இடங்களில் தரம் நிறைந்த சுவையான மாம்பழங்களும் விற்கப் படுகிறது.