/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மணி மண்டபம் திறப்பு விழா வீடு வீடாக அழைப்பிதழ்
/
மணி மண்டபம் திறப்பு விழா வீடு வீடாக அழைப்பிதழ்
ADDED : ஆக 09, 2024 02:27 AM

பொங்கலுார்;பொங்கலுார் ஒன்றியம், நாதகவுண்டம்பாளையத்தில், விவசாயிகள் சங்க தலைவர் என்.எஸ்.பழனிசாமி மணி மண்டபம் வரும் 18 ம் தேதி திறக்கப்படுகிறது. திறப்பு விழா அழைப்பிதழ் வீடு வீடாக வினியோகிக்கப்படுகிறது.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்.எஸ்.பழனிசாமி. விவசாயிகளுக்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ளார். அவர் பிறந்த இடமான பொங்கலுார் ஒன்றியம், நாத கவுண்டம்பாளையத்தில், அவரது நினைவாக மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. வரும், 18ம் தேதி மணி மண்டபம் திறப்பு விழா நடக்கிறது. திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த விவசாயிகள் சங்கம் திட்டமிட்டுள்ளது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து, பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், பொங்கலுார் வட்டார கிராமங்களில், மணி மண்டப திறப்பு விழா அழைப்பிதழை, வீடு வீடாகச் சென்று, சங்க நிர்வாகிகள் வினியோகித்து வருகின்றனர்.
----
பொங்கலுார் ஒன்றியம், நாதகவுண்டம்பாளையத்தில் திறக்கப்பட உள்ள விவசாயிகள் சங்கத் தலைவர் என்.எஸ்.பழனிசாமி மணிமண்டபம்.
என்.எஸ்.பழனிசாமி.