/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வளர்ந்த பாரதம்' கனவை நெஞ்சில் சுமந்து மராத்தான்
/
'வளர்ந்த பாரதம்' கனவை நெஞ்சில் சுமந்து மராத்தான்
ADDED : ஜூலை 01, 2024 02:02 AM

திருப்பூர்:'வளர்ந்த பாரதம்' லட்சிய கனவை நனவாக்குவதற்காக, ஆடிட்டர்கள் நேற்று மராத்தான் ஓட்டம் ஓடினர்.
திருப்பூர் பெத்திச்செட்டிபுரத்தில் உள்ள ஆடிட்டர் சங்கத்தில், 'வளர்ந்த பாரதத்துக்கான சி.ஏ., ஓட்டம்' என்ற பெயரில் மராத்தான் ஓட்டம் நேற்று நடந்தது. இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டம் மற்றும் பட்டயக் கணக்காளர் தின கொண்டாட்டமாகவும் மராத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், துவக்கிவைத்தார். ஆடிட்டர்கள் மற்றும் சி.ஏ., படிக்கும் மாணவர்கள் 50 பேர் பங்கேற்று, பிரதமரின் 'வளர்ந்த பாரதம்' கனவை நனவாக்கும் லட்சியம் வெல்வதற்காக மராத்தானில் ஓடினர். ஆடிட்டர் சங்க வளாகத்தில் துவங்கிய மராத்தான், ஜெய்வாபாய் பள்ளி, ராயபுரம் ரவுண்டானா சென்று, மீண்டும் ஆடிட்டர் சங்கத்தை அடைந்தது.
ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.