/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மார்க்கெட் வளாகம் வியாபாரிகள் ஆர்வம்
/
மார்க்கெட் வளாகம் வியாபாரிகள் ஆர்வம்
ADDED : பிப் 25, 2025 06:57 AM
திருப்பூர்; தினசரி மார்க்கெட் வளாகம் திறப்பு குறித்து துணை மேயருடன், மார்க்கெட் சங்க நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான தினசரி மார்க்கெட் வளாகம், காமராஜ் ரோட்டில் அமைந்துள்ளது. நீண்ட காலமாக செயல்பட்டு வந்த மார்க்கெட் வளாகம் இடித்து அகற்றப்பட்டது.
அந்த இடத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இறுதி கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கடை அமைப்புகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இருப்பினும், வளாகம் திறப்பு மற்றும் கடைகள் ஏலம் குறித்து எந்த முடிவும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இது குறித்து வியாபாரிகள் சங்கத்தினர் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தை சந்தித்து பேசி வருகின்றனர்.
நிதியாண்டு நிறைவடையுள்ள நிலையில், கட்டுமானப் பணிகளும் பெருமளவு முடிந்துள்ளதால், இது குறித்து ஆலோசிக்க நேற்று மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மாநகராட்சி அலுவலகம் சென்றனர்.
மேயர் மற்றும் கமிஷனர் ஆகியோர் இல்லை. துணை மேயர் பாலசுப்ரமணியத்தைச் சந்தித்து சங்க நிர்வாகிகள் இது குறித்து பேசினர்.
கடைகள் ஏலம் தொடர்பாக மேயர் மற்றும் கமிஷனர் ஆகியோரிடம் கலந்து பேசியும், எம்.பி., யிடம் தகவல் அளித்து அவருடனும் ஆலோசனை செய்து, நல்ல முடிவு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.