/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதிப்பெண் அள்ளியசென்சுரி பள்ளி மாணவர்
/
மதிப்பெண் அள்ளியசென்சுரி பள்ளி மாணவர்
ADDED : மே 16, 2024 05:29 AM

திருப்பூர், : திருப்பூர், சென்சுரி பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு பொது தேர்வில் மதிப்பெண் அள்ளினர்.
இப்பள்ளி மாணவி மெஹஜபின் ரிஹா, 500க்கு 492 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். இவர் கணக்கு பாடத்தில், 100 மதிப்பெண் பெற்றார். மாணவி லத்திகா ஸ்ரீ, 500க்கு, 491 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பெற்றார்; அறிவியல் பாடத்தில், 100 மதிப்பெண் பெற்றார். மாணவி ராபிதா, 486 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடம் பெற்றார்.
கணக்கு பாடத்தில், 3 பேர்; அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் தலா, ஒருவர் என, 100 மதிப்பெண் பெற்றனர். மொழி பாடத்தில் சென்சுரி பள்ளியின் இரு மாணவிகள், 99 மதிப்பெண் பெற்றனர். மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் சக்திதேவி, பள்ளி முதல்வர் ெஹப்சிபா பால், துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.