/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனியன் கிடங்கில் பயங்கர தீவிபத்து
/
பனியன் கிடங்கில் பயங்கர தீவிபத்து
ADDED : மார் 10, 2025 12:34 AM

திருப்பூர் ; திருப்பூர், ராக்கியாபாளையத்தைச் சேர்ந்தவர் முகமது பயாஸ், 50. நல்லுார், மணியகாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு வளாகத்தில் வேஸ்ட் பனியன் துணி வர்த்தகம் செய்து வருகிறார். நான்கு தளங்கள் கொண்ட கட்டட வளாகத்தில் தரை தளத்தில் இந்த கிடங்கு உள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணியளவில், கிடங்கிலிருந்து புகை வெளியேறியது. அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்ததையடுத்து அங்கு தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்தனர். வேஸ்ட் பனியன் மூட்டைகள் தீப் பிடித்து புகை வெளியேறியது தெரிந்தது.
கிடங்குக்குள் நுழைய ஒரு வழி மட்டுமே இருந்தது. புகையை எதிர்கொண்டு உள்ளே நுழைய முடியவில்லை. எதிர்புற சுவரை இடித்து வழி ஏற்படுத்தி, தீயணைப்பு துறையினர் உள்ளே நுழைந்தனர். ஆறு மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ கட்டுப்படுத்தப்பட்டது. தீவிபத்துக்கான காரணம் மற்றும் சேதம் குறித்து நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.