ADDED : மே 03, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;அவிநாசி மேற்கு ரத வீதியில் சி.ஐ.டி.யு.,- ஏ.ஐ.டி.யு.சி., அமைப்புகள் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகி முத்துசாமி தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம் வரவேற்றார்.
மா.கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன், ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் சேகர், சி.ஐ.டி.யு., மாநிலக்குழு உறுப்பினர் முத்துச்சாமி, நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, வெங்கடாசலம், பழனிசாமி, ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் சண்முகம், கோபால், செல்வராஜ், சுப்ரமணியம் உட்பட பலர் பேசினர். அவிநாசி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த சி.ஐ.டி.யு., மற்றும் ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.