/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அ.ம.மு.க., சார்பில் மே தின பொதுக்கூட்டம்
/
அ.ம.மு.க., சார்பில் மே தின பொதுக்கூட்டம்
ADDED : மே 06, 2024 11:09 PM
அனுப்பர்பாளையம்:திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், மே தின பொது கூட்டம், பி.என்., ரோடு, பாண்டியன் நகரில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, வடக்கு சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி முன்னிலை வகித்தார். தொழிற்சங்க பேரவை செயலாளர் மூர்த்தி வரவேற்றார். கட்சியின் துணை பொது செயலாளர் சண்முகவேலு, திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார், மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் ராஜேந்திரன், மாநில சிறுபான்மை நல பிரிவு துணை செயலாளர்ஜான் பேசினர்.
கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென மழை பெய்தது. இதனால் கூட்டம் கலைந்தது. மழைவிட்டதும் மீண்டும் கூட்டம் நடைபெற்றது.