/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு; மேயர்
/
குப்பை பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு; மேயர்
ADDED : பிப் 27, 2025 11:20 PM
திருப்பூர்; திருப்பூரில் நிலவும் குப்பை பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் திட்டம் விரைவில் துவங்க உள்ளது.
திருப்பூர் தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான தினேஷ்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
திருப்பூர் வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிகளில் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றிருக்கலாம்.
ஆனால், அடுத்தடுத்த உள்ளாட்சி மற்றும் லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி தான் வெற்றி பெற்றுள்ளது.
வரும் 2026 தேர்தலில் இவற்றில் வெற்றி பெறுவோம். மாநில அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்த்து அதை விளக்கி வெற்றி பெறுவோம்.
மாநகராட்சியைப் பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகளாக நிலவிய பிரச்னைகளைத் தீர்த்து வருகிறோம். குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் திட்டம் விரைவில் துவங்கும்.
பள்ளிகள், ரோடுகள், கழிப்பிடங்கள், வடிகால்கள் என அனைத்து அடிப்படை வசதிகளும் இன்னும் ஓராண்டு காலத்துக்குள் முற்றிலும் முழுமையாக மேற்கொள்ளப்படும். சொத்து வரி பிரச்னைக்கும் தீர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

