நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்:வெள்ளகோவில் சுற்றுப்பகுதியில் இரண்டு இடங்களில் நேற்று வரும் முன் காப்போம் திட்டத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இத்திட்டத்தின் கீழ் நேற்று வெள்ளகோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட உத்தமபாளையம் ஒன்றிய துவக்கப் பள்ளி; காங்கயம் ஒன்றியம், நெய்க்காரன்பாளையம் துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நேற்று இம்முகாம் நடைபெற்றது.
அமைச்சர் சாமிநாதன் முகாம்களை துவக்கி வைத்து பேசினார். ஈரோடு எம்.பி., பிரகாஷ் முன்னிலை வகித்தார். முகாமில் 10 பேருக்கு மருந்துப் பெட்டகம்; ஐந்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து நலப் பெட்டகம் மற்றும் ஆறு மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி ஆகியன வழங்கப்பட்டது.
மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி, ஒன்றிய கவுன்சிலர் லோகநாதன், ஊராட்சி தலைவர்கள் கவிதா, ராஜாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.